மன்னாரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ; இருவர் பலி

மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
கொலையாளிகள், இறந்தவர்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்த சரியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 20 times, 1 visits today)