தல்பேயில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் விசாரணை

ஹபராதுவ, தல்பே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தங்களை பொலிஸார் என்று அடையாளப்படுத்தி கொண்ட குழுவொன்று குறித்த நபரை மாத்தறையில் இருந்து காலி – தல்பே வரை கடத்தி சென்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர் குறித்த குழுவினர் அந்த நபர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 30 வயதான நபர் தற்போது கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)