இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி துப்பாக்கிச் சூடு!!! குற்றப்புலனாய்பு திணைக்கத்திடம் விசாரணை

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு லஹிரு விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் தனது தனிப்பட்ட காரில் அனுராதபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்த போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு 10.20 மணி முதல் 10.30 மணி வரை துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காரின் பின் பக்க கண்ணாடி சிறிது சேதமடைந்ததுடன், எம்.பி.க்கு காயம் ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர் அல்லது சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை