தென்கொரியாவில் குடிசை வளாகத்தில் பரவிய தீ! பலர் வெளியேற்றம்!
தென் கொரியாவின் கங்னம் (Gangnam) மாவட்டத்தில் உள்ள குடிசை குடியிருப்பு வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசித்து வந்த 250 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தீ விபத்தால் யாரும் காயமடையவில்லை என தீயணைப்பு துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் சுமார் எட்டு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.





