கஜகஸ்தானின் உருக்கு சுரங்கத்தில் தீவிபத்து : 25 பேர் பலி!
கஜகஸ்தானில் உள்ள மிகப்பெரிய உருக்கு சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏறக்குறைய 25 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரகண்டாவில் உள்ள தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த தீவிபத்தில் சிக்கி மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கத்திற்குள் 252 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 23 பேரை காணவில்லை என்றும் அதன் உரிமையாளரான ஆர்செலர் மிட்டல் டெமிர்டாவ் கூறினார்.
தீ விபத்திற்கான காரணம் அறியப்படாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





