ஹாங்காங்கில் (Hong Kong) தீவிபத்து – நால்வர் பலி, ஆபத்தான நிலையில் இருவர்!
ஹாங்காங்கின் (Hong Kong) வடக்கு தை போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள உயரமான குடியிருப்பு வளாகத்தின் மூன்று தொகுதிகளில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தீ விபத்து காரணமாக தாய் போ நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் திருப்பி விடப்படுவதாகவும் அந்நாட்டின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.




