கொழும்பில் தீ விபத்து – தீயணைப்பு நடவடிக்கை தீவிரம்
ஆமர்வீதியில் – கிறீன் லைன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஆறு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
(Visited 10 times, 1 visits today)





