ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தீ விபத்து – 3 சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்

சிட்னியின் Lalor Park பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்ததில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 20 தீயணைப்பு வீரர்களும் 6 தீயணைப்பு வாகனங்களும் வந்ததாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சம்பவ இடத்தில் இரண்டு மற்றும் நான்கு வயது சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து வெஸ்ட்மீட் மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ அணைக்கப்பட்ட பின்னர், அந்த இடத்தில் மற்றொரு 10 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த தீயினால் காயமடைந்த ஒன்பது வயது சிறுமி மற்றும் 11, 7 மற்றும் 6 வயதுடைய மூன்று சிறுவர்களுக்கும் அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

29 வயதுடைய பெண் ஒருவரும் புகையை சுவாசித்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புகையை சுவாசித்தமையினால் அவர் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!