லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீவிபத்து – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
லண்டனின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சில்லறை விற்பனை நிலையத்தின் சேமிப்பு கிடங்கில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சவுத்தாலில் (Southall) உள்ள சேமிப்பு கிடங்களில் முதற்கட்டமாக தீ பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு மாடி கட்டமைப்புகளில் ஒன்றில் பட்டாசுகள் மற்றும் சிலிண்டர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக அருகிலுள்ள பள்ளி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வெளியேற்றப்பட்டுள்ளன.
மேலும் பெரிய புகை மூட்டம் காரணமாக அருகிலுள்ள பகுதியில் வசிப்பவர்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. தீ பரவியதற்கான காரணம் குறித்து அறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.





