குரேஷியாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – தீயை கட்டுப்படுத்த பெரும் போராட்டம்!
குரோஷிய (Croatian) தலைநகரான ஜாக்ரெப்பின் (Zagreb) நகர மையப் பகுதியில் அமைந்துள்ள வானளாவிய கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
16 மாடி கட்டிடத்தின் உச்சியில் தீ தொடங்கியதுடன் விரைவாக கீழ் தளங்களுக்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. சுமார் நூறு தீயணைப்பு வீரர்கள் இணைந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் இன்று காலை தீயை கட்டுக்குள் கொண்டுவந்தாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தீவிபத்தால் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணத்தை அறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.
(Visited 6 times, 6 visits today)




