ஹட்டனில் லயன் குடியிருப்பில் தீப்பரவல்

ஹட்டன், ஷானன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் மின் கசிவு என சந்தேகிக்கப்படுகிறது.
தீ விபத்தில் தோட்டத் தொழிலாளர்களின் உடமைகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும், பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர்வாசிகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)