டெக்சாஸில் ஷாப்பிங் சென்டரில் தீ விபத்து : 500இற்கும் மேற்பட்ட விலங்குகள் பலி!
டல்லாஸ் ஷாப்பிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 500க்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை சிறிய பறவைகள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெக்சாஸின் டல்லாஸில் உள்ள பிளாசா லத்தினாவில் உள்ள ஒரு செல்லப் பிராணிகளுக்கான கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
தீயை அணைக்க 45 தீயணைப்பு வீரர்கள் கடமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தீப்பிழம்புகள் விலங்குகளை எட்டவில்லை என்றாலும் தீயால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் குறித்த விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)