பங்களாதேஷில் (Bangladesh) ஆடைத் தொழிற்சாலையில் தீவிபத்து – 09 பேர் பலி!

பங்களாதேஷ் (Bangladesh) தலைநகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலை மற்றும் இராசாயனக் கிடங்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டாக்காவின் மிர்பூர் ( Dhakas Mirpur) பகுதியில் உள்ள ஏழு மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மீட்புப் பணியாளர்கள் குறைந்தது ஒன்பது உடல்களை மீட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு அதிகாரி தல்ஹா பின் ஜாஷிம் (Talha bin Jashim) தெரிவித்துள்ளார். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆடைத் தொழில் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக பங்களாதேஷ் (Bangladesh) உள்ளது. இங்கு சுமார் 04 மில்லியன் மக்கள் இந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர்.
ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் 40 பில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகிறது. இருப்பினும் இவ்வாறான தீ விபத்து சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.