பின்லாந்து துப்பாக்கிச்சூடு : அரை கம்பத்தில் பறந்த கொடிகள்!
பின்லாந்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில் உயிரிழந்த மாணவருக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக அரைகம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய 12 வயது சிறுவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சந்தேக நபர் விசாரணைகளின் போது பொலிஸாரிடம் தாம் கொடுமைப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூட்டில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.





