பொருளாதார நெருக்கடியில் உள்ள பிரண்டினா பயனாளிகளுக்கு நிதியுதவி
பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள 2091 பிரண்டினா பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரண்டினா “லைப் லைன்” நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பசளை தட்டுப்பாட்டுடன் உணவு தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு பிரண்டினா லைப் லைன் திட்டத்தின் ஊடாக 3500 ரூபாய் வீதம் தெரிவு செய்யப்பட்ட 2091 பேருக்கு இக்கொடுப்பனவு (26) வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது பிரண்டினா லைப் லைன் திட்டத்தின் பிரதி பொது முகாமையாளர் பீ. ரஹீம், பிராந்திய முகாமையாளர் ஈ. திருச்செல்வம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.இந் நிதியினை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.முகம்மட் ரியாட் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் எஸ். டபிள்யூ. எஸ். டி. திஸாநாயக்க சிரேஷ்ட தபால் அதிபர் எம். விஜயகுமார், விவசாய போதனாசிரியர் ஜே. ஜே ஜசாட் ஆகியோர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.