ஜெர்மனியில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு நிதி உதவி

ஜெர்மனியில் அண்மைக்கால வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய விரும்புவோருக்கு நிதியுதவி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் Robert Habeck தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மின்சார வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய விரும்புவோருக்கு 6000 யூரோ நிதியுதவி வழங்கப்படவுள்ளது. பாவிக்கப்பட்ட இரண்டாம்தர மின்சார வாகனத்தை கொள்வனவு செய்வோருக்கு 3000 யூரோ வழங்கப்படவுள்ளது.
ஜெர்மனியில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
BMW உட்பட பல வாகன உற்பத்தி நிறுவனங்களின் விற்பனையில் சராசரியாக 15 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.