விமானத்தில் கோளாறு – 4 மணிநேரம் வானில் தவித்த பிரேசில் ஜனாதிபதி
பிரேசில் ஜனாதிபதி Luiz Inacio Lula da Silva பயணித்த விமானம் 4 மணிநேரத்துக்குப் பிறகு ஒருவழியாகத் தரையிறங்கியது.
மெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி Luiz Inacio Lula da Silva அங்குச் சென்றிருந்தார்.
மெக்சிகோவை விட்டுப் புறப்படும்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
உடனே தரையிறங்க முற்பட்டபோது அதில் சிக்கல் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 5 மணிநேரம் வானை வலம் வந்துகொண்டிருந்த விமானம் மெக்சிகோ சிட்டியில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
மாற்று விமானத்தில்Luiz Inacio Lula da Silva பிரேசிலுக்குத் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
(Visited 9 times, 1 visits today)