இலங்கையில் சிறுவர்களை அச்சுறுத்தும் காய்ச்சல் – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களுக்கு சளி மற்றும் இருமல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அறிகுறி உள்ளவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிகுறி உள்ள குழந்தைகளை முன்பள்ளி, பாடசாலை, பகல்நேர பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்புவதை தவிர்க்குமாறு வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
இது மற்றவருக்கு எளிதில் பரவக் கூடியதும் எனவும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 18 times, 1 visits today)