பிரித்தானியாவில் பல பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு: வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த 5 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பணியாற்றும் பெண் மருத்துவர்களில் 3 ல் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளதும், சிலர் தொந்தரவு செய்யப்பட்டதும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் தேசிய சுகாதார இயக்கத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், பணியிடத்தில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் 1,434 பேர் கலந்து கொண்டனர். இதன் முடிவுகள், ‛ பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் சர்ஜரி ‘ இதழில் வெளியிடப்பட்டது.
அதில், 30 சதவீத பெண் டாக்டர்கள், பாலியல் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர்.
29 சதவீதத்தினர், வேலை செய்யுமிடத்தில் பாலியல் ரீதியாக சீண்டலுக்கு உட்பட்டதாகவும் , 40 சதவீதம் பேர் உடல்ரீதியான விமர்சனத்திற்கு உள்ளானதாகவும், 38 சதவீதம் பேர் கேலி கிண்டலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களுக்கு பதிலளித்த பெண் அறுவை சிகிச்சை நிபுணர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கானதாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் சக ஊழியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் தெரிவித்தனர்.
சம்பவங்களைப் புகாரளிப்பது தங்கள் வாழ்க்கையை சேதப்படுத்தும் என்று அஞ்சுவதாகவும், அவ்ர்கள் தெரிவித்துள்ளனர்.