அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றில் நாமலை கிழித்து தொங்கவிட்ட பெண் எம்.பி.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சமீது Namal Rajapaksa , நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார் ஆளுங்கட்சி எம்.பியான   லக்மாலி lakmali hemachandra

இனவாத அரசியலை முன்னெடுக்கும் கூட்டம் எனவும் அவர் விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய லக்மாலி எம்.பி. கூறியவை வருமாறு,

“ இனத்துக்காகவும், மதத்துக்காகவும் முன்னிலையாகும் அரசியல்வாதி தான்தான் என காட்டிக்கொள்வதற்கு நாமல் ராஜபக்ச முற்படுகின்றார்.

தெற்கில் வாக்குகேட்டு சிங்கள மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் வருவதற்கு தற்துணிவற்ற நபரே இன்று வீரவசனம் பேசி அழைக்கின்றார்.

மக்களைப் பற்றி கதைப்பதற்கு இவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. நாட்டை நாசமாக்கிய கூட்டமே தற்போது இனவாத அரசியலை முன்னெடுக்க முற்படுகின்றது.

சிங்கள், பௌத்த மக்கள் நேர்மையானவர்கள். ஆனால் சிங்கள, பௌத்த மக்கள் எனக் காட்டிக்கொள்ளும் இந்த அரசியல்வாதிகளே ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர்.

இனவாதத்துக்கு இனி இடமில்லை. நாமலின் இனவாத அரசியல் இனியும் எடுபடாது.”என்றார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!