அமெரிக்க விசா நிராகரிப்பு காரணமாக ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் தற்கொலை
ஆந்திராவின்(Andhra Pradesh) குண்டூர்(Guntur) மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண் மருத்துவர் ஒருவர், அமெரிக்க(America) விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஹைதராபாத்தில்(Hyderabad) உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரோகிணி என அடையாளம் காணப்பட்ட மருத்துவர் கதவைத் திறக்காததால், வீட்டு வேலைக்காரர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்கு அதிக அளவு தூக்க மாத்திரை அல்லது ஊசி பயன்படுத்தியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அவர்கள் காத்திருப்பதால், மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது, அதில் அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




