சீனா மீதான அச்சம் : அமெரிக்காவிற்கே முதலிடம் எனக் கொக்கரிக்கும் ட்ரம்ப்!
டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்காவிற்கே முதலிடம் என்ற கொள்கை சீனாவின் உலகளாவிய செல்வாக்கு அதிகரித்து வருவதை குறிப்பிடுவதாக ஐரோப்பிய வெளியுறவு கவுன்சில் (ECFR) நடத்திய கணக்கெடுப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
21 நாடுகளில் கிட்டத்தட்ட 26,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 54% அமெரிக்கர்களும் 53% ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களும் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ளனர்.
பெரும்பான்மையானவர்கள் அடுத்த பத்தாண்டுகளில் சீனா அதிக செல்வாக்கு மிக்கதாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளனர். அத்துடன் சீனாவை எதிரியாகக் கருதுபவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், துருக்கி மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் பலர் இப்போது அதை ஒரு நட்பு நாடாகவோ அல்லது தேவையான கூட்டாளியாகவோ கருதுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ட்ரம்ப்பை தெரிவு செய்துள்ள பெரும்பான்மையான அமெரிக்கர்கள் நடப்பு அரசாங்கத்தின் மீது வெறுப்பை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





