ஐரோப்பா

அமெரிக்காவிற்கு சாதகமான அணுகுமுறை!! திரைமறைவில் நிற்கும் ஸ்டாமர் – சலிப்பில் மக்கள்!

பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டாமரின் டவுனிங் ஸ்ட்ரீட் ( Downing Street) உரை நாட்டு மக்களை சோர்வடைய செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம், மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கை செலவு முறை, உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பில் விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கமான அணுகுமுறையை பின்பற்றி சில விடயங்கள் குறித்து மேலோட்டமாக பேசியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ட்ரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக காத்திரமான பொருளாதார தடை குறித்து எவ்வித கருத்தையும் முன்வைக்காமல் மென்மையான போக்கை அல்லது ஒத்திசைவான போக்கை கடைப்பிடித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பிரித்தானிய மக்கள் இடையே தற்போது ஸ்டாமரின் புகழ் குறைந்து வருகின்ற இந்நேரத்தில் அவருடைய மென்மையான அணுகுமுறை மக்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி

ட்ரம்பின் சில புவிசார் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவு

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!