தன் 4 வயது மகளை துன்புறுத்தி வீடியோ வெளியிட்ட தந்தை ; கைது செய்த பொலிஸார்

மனைவி வெளிநாடு சென்ற பின்னர் தனது நான்கு வயது மகளை கொடூரமாக தாக்கி வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் 27 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மனைவி ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்குச் சென்ற நிலையில், சிறுமியை கவனித்துக் கொள்வதற்காக சந்தேக நபர் மற்றும் அவரது பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் இன்று (03) உத்தரவிட்டார்.
(Visited 16 times, 1 visits today)