உள்ளாடைகளில் இரத்தினக்கல் கடத்தல் தந்தை மகள் கைது
தமது உள்ளாடைகளில் இரத்தினக் கற்களை சீனாவுக்கு கடத்திச் செல்ல முயற்சித்த சீன நாட்டவரான தந்தையையும் மகளையும் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விமான நிலையத்தில் இவர்கள் இருவரையும் பொதிகளையும் Scan ஸ்கேன் செய்யும் போது தமது உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த பெறுமதியான இரத்தினக்கற்கள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன.
இவர்கள் மறைத்து வைத்திருந்த இடத்தின் கற்களின் பெறுமதி 1கோடி 75 இலட்சம் என மதிப்பிடப் பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இலங்கையில் தங்குமிட விசா வசதி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் இங்கு தங்கும் காலத்தில் பல்வேறு வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)