இலங்கையில் அதிகாலையில் உலுக்கிய கோர விபத்து – அதிகரித்த மரணங்கள்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 11 ஆக அதிகரித்துள்ளது.
பேருந்து ஓட்டுநர் உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் இறந்த 11 பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 6 times, 6 visits today)