இலங்கையில் கோர விபத்து – மூவர் பலி, 30 க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்!
ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் குறித்த விபத்தில் 30ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது
(Visited 5 times, 5 visits today)