முரசுமோட்டையில் கோர விபத்து – நால்வர் பலி!
முல்லைத்தீவு – பரந்தன் பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து ஒன்று கார் ஒன்றுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காரில் 05 பேர் பயணித்த நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





