தமிழ்நாடு

சென்னையில் கோர விபத்து – பெண் பலி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் சென்னையைச் சேர்ந்த பத்மபிரியா சம்பவ இடத்திலேயே பலி ஐந்து வயது குழந்தையும் அவரது தந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆவுடப்பொய்கை திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ரயில்வேயில் டெக்னிசியனாக வேலை பார்க்கும் பாலநாராயண சிங் தனது மனைவி பத்மபிரியா ஐந்து வயது மகள் ஹரிதா உடன் கடந்த ஞாயிறு அன்று காரில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை,மற்றும் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஆகிய கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

பின்னர் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் மீண்டும் சென்னை செல்லும் பொழுது காரைக்குடி ஆவுடைபொய்கை என்ற இடத்தில் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில் பத்மபிரியா சம்பவ இடத்திலேயே பலியனர்.

அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் பாலநாராயணர் சிங் அவரது 5 வயது குழந்தை ஹரிதா உயிர் தப்பினர் பலியான பத்மபிரியா உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!