ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து அயர்லாந்தில் விவசாயிகள் போராட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்(European Union) தென் அமெரிக்க கூட்டமைப்பு மெர்கோசூருக்கும்(Mercosur) இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக அயர்லாந்து(Ireland) விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
பெரும்பான்மையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ஒரு நாளுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.
மத்திய நகரமான அத்லோனில்(Athlone), அயர்லாந்து முழுவதிலுமிருந்து விவசாயிகள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய கூடினர்.
இதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில்(France) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
பிரான்ஸின் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாரிய போராட்டம்!





