ரஞ்சிதா “பிரதமர்” ஆகிறார்.. “கைமாறும்” இணையத்தில் வட்டமடிக்கும் செய்தி
கைலாசாவில் இருந்து வீடியோ, ஆடியோ, போட்டோக்கள், உட்பட சுடசுட செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.. லைவ் டெலிகாஸ்ட்களும் நடக்கின்றன.. இந்த கைலாசா என்பது மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளதாக சொல்கிறார்கள்.
ஆனால் கைலாசா எங்கே இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.. இத்தனைக்கும் அந்த நாட்டுக்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை அறிவித்த நித்தி, வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்தவதாகவும் சொல்லியிருந்தார்.
famous-tamil-actress-ranjitha-becomes-the-new-prime-minister-of-kailasa
அத்துடன், அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற போட்டோக்கள்கூட சோஷியல் மீடியாவில் வெளியாகியிருந்தன. இதனிடையே நித்யானந்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திடீரென தகவல்கள் வெளியானது.
ஆனாலும், அதற்கு பிறகும், சோஷியல் மீடியவில் நேரலையில் தோன்றி சொற்பொழிவு ஆற்றிக்கொண்டு இருக்கிறார் நித்தியானந்தா.
இதுபோக, கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐநாசபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கைலாசா என்ற ஒரு நாடே இல்லாத போது, அதன் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி? என்றும் கேள்விகள் வலம்வந்தன.
இப்படி சர்ச்சை மேல் சர்ச்சை என ஹிட் அடித்து கொண்டிருக்கும் கைலாயா பற்றி இன்னொரு பரபரப்பு கிளம்பி உள்ளது.
நடிகை ரஞ்சிதா, கைலாயா நாட்டுக்கு பிரதமராக போகிறாராம்.. கைலாசாவின் இணையதள செயலியான லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் போட்டோ, “நித்யானந்தா மாயி சுவாமி” என்ற தலைப்பில் உள்ளது..
அதற்கு கீழே “கைலாசாவின் பிரதமர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. இதுதான் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
View this post on Instagram