ஜப்பானில் 49 வயதில் உயிரிழந்த பிரபல சிம்பன்சி
100க்கும் மேற்பட்ட சீன எழுத்துக்களையும் ஆங்கில எழுத்துக்களையும் அடையாளம் காணக்கூடிய மேதை சிம்பன்சியான(chimpanzee) ஐ(Ai), 49 வயதில் இறந்துவிட்டதாக ஜப்பானிய(japan) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிய மொழியில் காதல் என்று பொருள்படும் ஐ, விலங்கு நுண்ணறிவு பற்றிய கருத்து, கற்றல் மற்றும் நினைவாற்றல் குறித்த ஆய்வுகளில் பங்கேற்றதாக கியோட்டோ(Kyoto) பல்கலைக்கழகத்தின் மனித நடத்தைக்கான பரிணாம தோற்றம் மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல உறுப்பு செயலிழப்பு மற்றும் முதுமை தொடர்பான நோய்களால் சிம்பன்சி உயிரிழந்துள்ளது.
சீன மற்றும் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமன்றி, பூஜ்ஜியத்திலிருந்து ஒன்பது மற்றும் 11 வண்ணங்கள் வரையிலான அரபு எண்களையும் ஐ அடையாளம் காணும் என்று விலங்கு ஆய்வாளர் டெட்சுரோ மட்சுசாவா(Tetsuro Matsuzawa) தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்காவைச்(West Africa) சேர்ந்த சிம்பன்சி 1977ல் கியோட்டோ பல்கலைக்கழகம் வந்துள்ளது, மேலும் 2000ம் ஆண்டில் ஒரு மகன் அயுமுவைப் பெற்றெடுத்தது.





