இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பரபரப்பப்படும் பொய் பிரச்சாரம்

இலங்கையில் மாகாணசபைத் தேர்தலைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போலி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளியாகும் தகவல்களை ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஒருவர் நிராகரித்துள்ளார்.
எல்லை நிர்ணயப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அடுத்த வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் முற்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும், தேர்தலைக் காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு ஆளுங்கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையிலேயே, ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் இதனை மறுத்துள்ளார்.
(Visited 3 times, 3 visits today)