கொழும்பில் பெண்ணிடம் பணம் கேட்டு சிக்கிய போலி அதிகாரி – பொலிஸார் எச்சரிக்கை
 
																																		குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் போல் நடித்து பெண்ணிடம் பணம் கேட்ட சந்தேக நபர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாபிம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும், அது தொடர்பில் விசாரணை நடத்துவது தானே எனவும் சந்தேக நபர் பெண்ணிடம் கூறி 25,000 ரூபா பணம் கோரியுள்ளார்.
இதன்படி, சந்தேகநபரை கடவத்தை பொலிஸார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகரின் போலியான அடையாள அட்டை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
        



 
                         
                            
