இலங்கை செய்தி

கனடாவிலிருந்து வந்தவர் மீது யாழ்.அனலைதீவில் வாள்வெட்டு தாக்குதல்

கடந்த வருடம் கனடாவிலிருந்து வருகை தந்து அனலை தீவில் தங்கியிருந்த வயோதிப தம்பதியரை கொலை செய்வதற்கும் அவர்களின் பொருட்களை திருடுவதற்கும் முயற்சித்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் காலதாமதமாவது குறித்து அவர்களின் குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் இணையவழி பிரச்சாரமொன்றையும் ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக தாக்கப்பட்ட வயோதிபர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது:

பெப்ரவரி 23, 2023 – அந்த நாள் வலி மற்றும் ஆழ்ந்த அவநம்பிக்கை எங்கள் நினைவுகளில் பொறிக்கப்பட்ட ஒரு நாள். எங்கள் அன்புக்குரிய தந்தை சுப்பிரமணியம் நாகலிங்கம் மற்றும் எங்கள் அன்பான தாயார் இந்திரதேவி சுப்ரமணியம் அவர்கள் இலங்கைக்கான தாயகம் திரும்பும் பயணத்தின் அமைதியைத் தகர்க்கும் ஒரு பயங்கரமான சம்பவத்தை எதிர்கொண்டனர்.

இந்தியாவின் கேரளாவிற்கு ஆன்ம ஊட்டமான புனித யாத்திரை பயணத்திற்குப் பிறகு, எங்கள் தந்தையின் பூர்வீக வீடு அமைந்த இலங்கையின் அனலை தீவில், அவர்களின் வேர்களை வணங்க எங்கள் பெற்றோர் முடிவு செய்தனர்.

அனலை தீவில் வசித்தபோது வாள்கள் மற்றும் தடிகள் ஏந்திய மூன்று தாக்குதல்காரர்களால் திட்டமிடப்பட்ட ஒரு பயங்கரமான வன்முறையால் அவர்களின் அமைதியான தூக்கத்தை தொலையும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

நள்ளிரவு 12:30 மணியளவில் அந்த நபர்கள் எங்கள் குடும்ப வீட்டிற்குள் நுழைந்து ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் இருந்த எங்கள் தந்தையையும் அம்மாவையும் தாக்கினர்.

வன்முறையின் கொடூரத் தாக்குதலால் எங்கள் தந்தை திடீரென எழுந்ததால் அந்த இரவின் அமைதி சிதறியது.மூன்று தாக்குதல்காரர்கள் இரக்கமற்ற மூர்க்கத்துடன் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

தெம்பில்லாத உடலில் இரக்கமின்றி அடித்தனர். கொடூரமாக தாக்கினர். தந்தைக்கும் எங்கள் அன்பான தாய்க்கும் கடுமையான தீங்கு விளைவித்தனர். தாக்குதலின் கொடூரம் எங்கள் தந்தையை சுயநினைவின்றி இரத்த வெள்ளத்தில் கிடத்தியது.

அதே நேரத்தில் எங்கள் அம்மாவும் இந்த கொடூரமான முறையால் பாதிக்கப்பட்டார். எங்கள் தந்தைக்கு ஏற்பட்ட காயங்கள் மோசமானவை. பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அவரது மூக்கில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.

அவரது கண்கள் மற்றும் கன்னங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அவரது கைகள் மற்றும் கால்களில் பலமான அடிகளால் எலும்புகள் உடைந்து தசைநார்கள் கிழிந்து அவரால் நிற்கவோ நடக்கவோ முடியவில்லை.

உதவி கிடைப்பதற்கு பல மணிநேரம் வலி வேதனையுடன் காத்திருக்கவேண்டியிருந்தது.எங்கள் தந்தை கடற்படை படகு மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அறுவை சிகிச்சைகள், இரத்தம் ஏற்றுதல் என சிதைந்து போன உடலோடிருந்தவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவ நிபுணர்களின் அயராத முயற்சிகள் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை.

விடயங்களை மேலும் சிக்கலாக்கும் பாதுகாப்புக் கவலைகள் அதிகரித்ததால் எங்கள் தந்தையை கொழும்புக்கு அவசரமாக இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, கனடாவுக்கு செல்வதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட விமானம் கனடிய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் எங்கள் தந்தை ரொறன்ரோவில் உள்ள சன்னிபுரூக் மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் ரன்னிமீட் சுகாதார மையத்தில் விரிவான மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். மருத்துவ வல்லுநர்களின் துணிச்சலான முயற்சிகள் இருந்தபோதிலும் எங்கள் தந்தை கொடூரமான தாக்குதலினால் உடல் மற்றும் உணர்வு ரீதியான பாதிப்புகளுடன் தொடர்ந்து போராடுகிறார்.

அவர் தன்னை வலியிலிருந்து மீட்க சவாலான பாதையில் செல்லும்போதும், எங்கள் தந்தை நீதியைப் பின்தொடர்வதில் உறுதியாக இருக்கிறார். தமக்கான நீதியை பெறும் முயற்சிகளின்போது அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறார்.

எங்கள் வாழ்க்கையையே மாற்றிவிட்ட அதிர்ச்சிகரமான கொடுமைகளுக்கு முடிவை காணவேண்டும். முன்னோக்கி செல்லும் பாதை நிச்சயமற்றதாக இருந்தாலும்,

எங்கள் அன்புக்குரிய தந்தைக்காக எங்கள் குடும்பமே ஒன்றுபட்டு மிகப்பெரும் ஆதரவு வழங்குகிறது. அவருடைய ஒளி நிறைந்த வாழ்க்கையின் பக்கங்களை இருட்டாக்கிய சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையாக நிற்கிறது எங்கள் குடும்பம் என தெரிவித்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content