பேருந்துகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி!
பயணிகள் விரைவில் வங்கி வழங்கிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
புதிய முறை நவம்பர் 24, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்னணு டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் இந்த வசதி கிடைக்கும் எனத் தெரிவித்த அவர், இதனால் பயணிகள் பணத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தங்கள் அட்டைகளை ஸ்வைப் செய்யலாம் எனவும் கூறியுள்ளார்.
பொது போக்குவரத்தை நவீனமயமாக்குவதற்கும் தினசரி பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக அமைச்சர் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.




