சீனாவிலிருந்து கனடாவிற்கு வந்த பெட்டிக்குள் தெரிந்த கண்கள்; அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்
சீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பெட்டியொன்றில் பூனையொன்றை கனடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
வான்கூவார் ரிச்மன்ட்டின் பிரதான தபால் நிலைய பொதியிடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட பெட்டியில் இந்த பூனை இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெட்டியிலிருந்து துளையின் ஊடாக கண்களை மட்டும் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அதன் பின்னர் பெட்டியை திறந்த போது அதில் பூனையொன்று உயிருடன் இருப்பதனை அவதானித்துள்ளனர்.
இந்தப் பூனை ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மிருக நலன் காக்கும் அமைப்பிற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
பூனைக்கு ஏதேனும் தொற்று நோய் உண்டா என்பது குறித்தும் அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.எவ்வளவு நாட்கள் இந்த பூனை பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.