வட இந்தியாவில் நிலவும் கடும் வெப்பம் : 34 பேர் உயிரிழப்பு!
வட இந்தியாவில் நிலவுகின்ற கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பெரும் பகுதியில் நிலவுகின்ற வெப்பத்தின் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்ட மக்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என வைத்தியவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், கடுமையான உடல்நலப் பாதிப்பு கொண்டவர்கள் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநில தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கே 300 கிலோமீட்டர் (200 மைல்) தொலைவில் உள்ள பல்லியா மாவட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
வியாழக்கிழமை இருபத்தி மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் 11 பேர் வெள்ளிக்கிழமை இறந்தனர் என்று பல்லியாவின் தலைமை மருத்துவ அதிகாரி ஜெயந்த் குமார் தெரிவித்தார்.
பெரும்பாலான இறப்புகள் மாரடைப்பு, மூளை பக்கவாதம் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்பட்டதாக அவர் கூறினார்.