இலங்கை செய்தி

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஓய்வு பெறவிருந்த குழுவினருக்கு பணி நீட்டிப்பு

60 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் பரிந்துரைகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

450 பெட்ரோல் நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஊழியர்களைக் குறைத்து, ஓய்வு பெற வேண்டிய ஊழியர்கள் நிறுவனத்துக்கு கூடுதல் சுமையாக உள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர், இந்த சேவை நீடிப்பு தொடர்பான வினவலில், அரசாங்கம் புதிய ஆட்சேர்ப்புகளை நிறுத்தியுள்ளதாகவும், எனவே அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கு அனுபவமிக்க ஊழியர்களின் சேவைகளை நீடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் அத்தியவசிய சேவை ஊழியர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு நிறுவனங்களின் அனுமதி கோரி இதுவரையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த நிறுவனங்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!