ஆசியா செய்தி

சிங்கப்பூரில் முன்னாள் அமைச்சரின் பரிதாப நிலை – சிறை வாழ்க்கை தொடர்பில் வெளியான தகவல்

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் தனிநபர் சிறையில் இருப்பதாகச் சிறைச்சேவை அறிவித்துள்ளது.

பாதுகாப்பு பிரச்சினைகள் அதிகம் என்பதால் ஈஸ்வரனை மற்ற சிறைக் கைதிகளுடன் இருக்கவைக்காமல் தனியாக வைக்க நேரிட்டதாக அது குறிப்பிட்டது.

வைக்கோலில் செய்யப்பட்ட ஒரு பாயும் இரண்டு போர்வைகளும் அவருக்கு கொடுக்கப்பட்டன.

அனைத்துச் சிறைக்கைதிகளுக்கும் அதே அணுகுமுறைதான் பின்பற்றப்படுகிறது என்றும் அனைவரும் சிறை விதிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உட்படுத்தப்படுவர் என்றும் அது தெரிவித்தது.

ஈஸ்வரன் நேற்று முன்தினம் 12 மாதச் சிறைக்காலத்தைத் தொடங்கினார். நேற்று முன்தினம் பிற்பகல் மூன்றரை மணிவாக்கில் அரசு நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.

சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அவர் தமது Facebook பக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!