இந்தியா செய்தி

என்னை தூக்கில் போட்டாலும் மல்யுத்த போட்டிகளை நிறுத்தக்கூடாது – சரண் சிங்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி. இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புகார் அளித்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் போராட்டம் இன்று 9வது நாளாக நீடிக்கிறது. பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

போராட்டம் தீவிர மடைவதால் பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

போராட்டம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அனைத்து மல்யுத்த நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள், ஆனால் மல்யுத்த செயல்பாடுகளை நிறுத்தக்கூடாது என சொல்கிறேன். குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, திரிபுரா என யார் ஏற்பாடு செய்தாலும், போட்டிகளை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் செய்தியாளர்களிடம் கூறினார்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி