79 பேரின் உயிரை பறித்த ஐரோப்பிய கனவு – 106 பேரை காப்பாற்றிய செல்வந்தரின் படகு
கிரீஸுக்கு அருகே மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்த பெரும் சோகமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
20 முதல் 30 மீட்டர் வரை நீளம் கொண்ட அந்தப் படகில் நூற்றுக்கணக்கான குடியேறிகள் இருந்ததாக நம்பப்படுகிறது.
அவர்கள் லிப்யாவிலிருந்து இத்தாலிக்குச் சென்றுகொண்டிருந்தனர். தேடல் பணிகளில் மெக்சிகோவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தரின் சொகுசுப் படகு பேருதவி புரிந்தது.
குறித்த செல்வந்தரின் சொகுசுப் படகில் 106 பேர் காப்பாற்றப்பட்டதாக Bloomberg செய்தி நிறுவனம் சொன்னது.
படகு மெக்சிகோவில் ‘வெள்ளி அரசர்’ என்று அழைக்கப்பட்ட அல்பெர்ட்டோ பைலியெரெஸுக்குச் (Alberto Bailleres) சொந்தமானது.
ஒரு காலத்தில் உலகின் ஆகப் பெரிய வெள்ளி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த அவர் கடந்த ஆண்டு காலமானார். Bloomberg தகவல்படி அவர் மெக்சிகோவின் 4-ஆவது ஆகப் பெரிய செல்வந்தராக இருந்தவர்.