ஐரோப்பா

2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த ஐரோப்பிய நாடு

2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான அன்டோரா பிடித்துள்ளது.

உலகின் பாதுகாப்பான நாடுகளை அடையாளம் காணும் நோக்கில், நம்பியோ (Numbeo) தரவுத்தளம் 2025ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குறியீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது

குற்ற விகிதம், பொது பாதுகாப்பு, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் குடியிருப்பு மக்களின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. இ

பட்டியலில் முதல் இடத்தை ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான அன்டோரா (Andorra) பிடித்துள்ளது. அதன் பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் (2வது இடம்) மற்றும் கத்தார் (3வது இடம்) ஆகியவை இடம்பிடித்துள்ளன. மற்ற 10 நாடுகளில் தைவான், ஓமான், ஐல் ஆப் மேன், ஹாங்காங், ஆர்மீனியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகியன இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு 147 நாடுகளில், இந்தியா 55.7 புள்ளிகள் பெற்று 66வது இடம் பிடித்தது.

சீனா – 76.0 புள்ளிகள் (15வது இடம்)

இலங்கை – 59வது இடம்

பாகிஸ்தான் – 65வது இடம்

வங்கதேசம் – 126வது இடம்

மேலும், இங்கிலாந்து 87வது இடத்திலும் (51.7 புள்ளிகள்), அமெரிக்கா 89வது இடத்திலும் (50.8 புள்ளிகள்) உள்ளன.

இப்பட்டியலில் மீறல்களும், குற்றச்செயல்களும் அதிகம் உள்ள நாடாக வெனிசுலா, 19.3 புள்ளிகளுடன் கடைசி (147வது) இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசை, உலக நாடுகளில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலைகளை ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் அடிப்படையைக் கொடுப்பதுடன், சுற்றுலா, குடியேற்றம் மற்றும் முதலீட்டு முடிவுகளை எடுக்கவும் வழிகாட்டியாக இருக்கிறது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்