ஐரோப்பா

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள்! அயர்லாந்து, நார்வே தூதர்களை திரும்ப பெறும் இஸ்ரேல்

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அயர்லாந்து அரசாங்கம் புதன்கிழமை அறிவிக்க உள்ளது,

இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக நன்கு அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களான அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்லோவேனியா மற்றும் மால்டா ஆகியவை சமீபத்திய வாரங்களில், பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கு இரு நாடுகளின் தீர்வு அவசியம் என்று வாதிட்டு, ஒரு ஒருங்கிணைந்த அறிவிப்பில், அங்கீகாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

ஹமாஸை முறியடிப்பதற்கான இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து காஸாவில் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையில் இந்த முயற்சிகள் வந்துள்ளன
1988 ஆம் ஆண்டு முதல், 193 ஐ.நா உறுப்பு நாடுகளில் 139 பலஸ்தீன மாநிலத்தை அங்கீகரித்துள்ளன.
.
அயர்லாந்து அரசாங்கம், இந்த அங்கீகாரம் சமாதான முயற்சிகளை நிறைவு செய்யும் என்றும் இரு நாடுகளின் தீர்வுக்கு ஆதரவளிக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் நார்வே பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரே புதன்கிழமை தெரிவித்தார், முந்தைய அறிக்கைகளை உறுதிப்படுத்தினார்.

இந்த அறிவிப்புகள் வெளியான நிலையில் அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய இருநாடுகளில் இருந்து தனது தூதர்களை திரும்ப பெறுவதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்துள்ளது.

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் இந்த நாடுகளின் முடிவை எதிர்த்து இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தங்கள் தூதர்களை உடனடியாக நாட்டுக்கு திரும்ப அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், ”இஸ்ரேலின் இறையாண்மை மற்றும் அதன் பாதுகாப்பு குலைக்கப்படுவதை அங்கீகரிக்கும் யாரையும் இஸ்ரேல் பொருத்துக்கொள்ளாது.

”யூதர்கள் மீது நாஜி படுகொலைக்கு பிறகான கொடூரமான செயலை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய பிறகு, உலகம் இதுவரை கண்டிராத பாலியல் வன்கொடுமைகளை செய்த பிறகு. இந்த நாடுகள் ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு வெகுமதியளிக்கும் வகையில் பாலஸ்தீனத்தை அரசாக அங்கீகரிக்கின்றன. இது அக்.7 பலியானவர்களை அவமதிக்கும் செயல். பிணைக்கைதிகளை விடுவிக்க நடக்கும் முயற்சிகளை குலைக்கிற செயல் ”

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவில் ஸ்பெயினும் தொடருமானால் இஸ்ரேல் இதே நடைமுறையை பின்பற்றும் என காட்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அரசாக அங்கீகரிப்பதாக புதன்கிழமை அறிவித்தன.

அங்கீகாரம் இல்லையெனில் அங்கு அமைதி தொடராது என முதலில் அறிவிப்பை விடுத்த நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் தெரிவித்தார்.

(Visited 55 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!