பிரதமர் மெலோனி மற்றும் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரும் ஐரோப்பிய வங்கி
இத்தாலியின் மிகப்பெரிய வங்கியான Intesa Sanpaolo, பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் பிற உயர்மட்ட நபர்களை குறிவைத்ததாகக் கூறப்படும் இக்கட்டான பாதுகாப்பு மீறலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளது.
மெலோனி உட்பட ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இன்டெசா ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
“எங்கள் வங்கியின் விசுவாசமற்ற ஊழியர், சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் உள் நடைமுறைகளை கடுமையாக மீறும் நடத்தை மூலம், சில வாடிக்கையாளர்களைப் பற்றிய தரவு மற்றும் தகவல்களை நியாயமற்ற முறையில் அணுகினார்” என்று Intesa ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“நாங்கள் தரவு பாதுகாப்பு ஆணையத்திற்கு அறிவித்தோம், விசுவாசமற்ற பணியாளரை பணிநீக்கம் செய்தோம், நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது மீண்டும் நடக்கக்கூடாது,” என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.