ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோர முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்
புகலிடக்கோரிக்கையாளர்களை மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பும் பிரித்தானியாவின் வழியை ஐரோப்பிய ஒன்றியமும் பின்பற்றவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் கட்சி ருவாண்டா பாணி புகலிட ஒப்பந்த யோசனையை முன்வைத்த பின்னர் பிரித்தானியாவின் நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஐரோப்பிய ஆணையரின் ஐரோப்பிய மக்கள் கட்சி பாதுகாப்பான மூன்றாம் நாடுகள் என்ற கருத்தை செயல்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளது.
அதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்கள் பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு மாற்றப்படலாம் மற்றும் அங்கு புகலிட நடைமுறைக்கு உட்படுத்தப்படலாம் என ஐரோப்பிய மக்கள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நாகரீகமான மற்றும் பாதுகாப்பான வழியில் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்ய மூன்றாம் நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வோம். பாதுகாப்பான மூன்றாம் நாடுகள் என்ற கருத்தை நாங்கள் செயல்படுத்த விரும்புகிறோம்.
“ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் எவரும் பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு மாற்றப்பட்டு அங்கு புகலிட நடைமுறைக்கு உட்படுத்தப்படலாம். நேர்மறையான முடிவு ஏற்பட்டால், பாதுகாப்பான மூன்றாவது நாடு விண்ணப்பதாரருக்கு பாதுகாப்பு வழங்கும்” என குறிப்பிடப்படுகின்றது.