ஐரோப்பா

ரஷ்ய எரிவாயு தடைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புதல்!

ரஷ்ய எரிவாயு தடைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளன.

இதன்படி  2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரஷ்ய எரிவாயு இறக்குமதியைத் தடை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தற்போது சட்டமாக நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரஸ்ஸல்ஸில் இன்று நடந்த ஒரு கூட்டத்தில் இந்தக் கொள்கை அங்கீகரிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ரஷ்ய எரிபொருளை பெரிதும் நம்பியுள்ள ஹங்கேரி (Hungary) இந்த விவகாரத்தை ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதாக அறிவித்துள்ளது.

ஹங்கேரி (Hungary) ரஷ்யாவின் எரிவாயுவை 90 சதவீதம் நம்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!