இலங்கை

இன, மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் – ரணில்!

இன மற்றும் மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன, மத பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காமல் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அதற்கான விரைவான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக சாதி, மத வேறுபாடின்றி நாட்டு மக்கள் அனைவரும் மிக மோசமான அனுபவத்தை எதிர்நோக்க நேரிட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சிங்களமோ தமிழோ.. அனைவரும் ஒன்றிணைந்து ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்வதே இன்றைய தேவை என்றும் வலியுறுத்தினார்.

பிரிவினையினாலும், ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொண்டும், இலங்கை ஒரு நாடாக வீழ்ந்துள்ளது எனவும், அரசியல் பிளவு இலங்கையை மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்