கிரீஸில் ஆடுகளை பாதித்த நோய் தொற்று – 16,500க்கும் அதிகமான ஆடுகளுக்கு பரிசோதனை
கிரீஸில் ஆடுகளை பாதித்த நோய் தொற்று தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
16,500க்கும் அதிகமான ஆடுகளுக்கு ‘goat plague’ எனும் நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 9 ஆடுகளுக்கு அந்த நோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு மற்ற ஆடுகளுக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் கூறினர்.
ஆடுகளைப் பாதித்த நோய் பற்றி முதலில் ஜூலை 11ஆம் தேதி தெரிய வந்தது. இதுவரை பாதிக்கப்பட்ட சுமார் 2,500 ஆடுகள் கொல்லப்பட்டன.
கிருமித்தொற்று எங்கிருந்து ஆரம்பித்தது என்பதைக் கண்டுபிடிக்க கிரீஸ் முனைகிறது.
வெள்ளிக்கிழமைக்குள் கூடுதலாக 120,000 ஆடுகள் பரிசோதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)