“EPF மற்றும் ETFஐ வெளிநாட்டில் முதலீடு செய்ய ஆலோசனை!
ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றில் உள்ள பணத்தின் ஒரு பகுதியை வெளிநாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (04.10) உரையாற்றிய அவர், மேற்படி முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், எதிர்கால நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் EPF மற்றும் ETF இரண்டையும் ஒரு சுயாதீன சபையின் கீழ் கொண்டு வரும் என்றும் கூறினார்.
“EPF மற்றும் ETF இரண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் எனத் தெரிவித்த அவர், மற்ற சுயாதீன நிதிகளும் அதில் வர வேண்டும் என்றும் அந்தப் பணத்தின் ஒரு பகுதியை வெளிநாட்டில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவை நாட்டிலுள்ள மக்களின் சேமிப்பு எனக் கூறிய அவர், வெளிநாடுகளிலும் முதலீடு செய்ய அனுமதிப்போம். விடுங்கள் என்றும் இது பற்றி நாம் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.